Tuesday, March 2, 2010

Aattral Editor Dishes Out with Same Spoon to Peddlers of Troubles

ஆற்றல் கேள்வி கேட்போர் கைங்காரியம்

(இரண்டாவது தொடர்)

ஆற்றல் ஆசிரியர்க்கு வரும் கடிதங்களை தபால்கார் வசம் பெற்றதும் ─ உடனேயே உடைத்து வாசித்து சிலாகித்த பின்னரே -─ உரியவர் படிப்பது வளமை ─

ஆசிரியர் தனக்கு தானே ஓரு கடிதம் எழுதினார்  ─

''ஆற்றல் ஆசிரியரே ─ நீர் என்ன குமுதம் ஆனந்தவிகடன் ஆசிரியர் என்ற நினைப்போ  ?
நான் எழுதிய சிறு கதையை போடவில்லை,
பிறகு கவிதை அனுப்பினன் அதையும் காணேல்லை, உங்கை என்ன அய்சே செய்யிறீர்?
எல்லாத்தையும் இளுத்து மூடீட்டு வீட்டை போனால் உமக்கும் நல்லது உலகத்துக்கும் நல்லது, வணக்கம்.''

இதை வாசித்து ─ அட்காசமாக சிரித்து - ஏல்லோருக்கும் பெரிய நாட்டுகூத்து குரலில் வாசித்து காட்டி - பெண் கிளார்க் பொட்டையள் என்னிடம் பரிதாபம் போல நடித்து

''என்ன சேர் இப்படி நக்கல் அடித்து எழுதினவளுக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேணும் நீங்கள்''  என்னும் ரீதியில் பலர்

அடுத்த இதள் வெளிவந்தது

கேள்வி பதில் பகுதியில் பலரது கவனம் சென்றது

மேற் குறித்த கடிதமும் - அதன் பதிலும்

''அம்மணி, பத்திரிகைக்கு கதை, கவிதை, கட்டுரை எழுதும் விதி முறைகளை உங்களை போன்ற ஆர்வமுள்ள மாணவர் எழுத்துலகில் பிரவேசித்து பிரகாசிக்கவென நான்கு தடவை ஆற்றல் கொண்டு வந்ததே கவனிக்கவில்லையா
சரி போகட்டும் - உங்களுக்குள்ள பற்றாகுறை தங்களுக்கு தானே புரியும் -  உங்களது படைப்புகளை திருத்தி எழுதி அனுப்பினேன் - அவற்றை மீள எழுதி அனுப்பாதது எனது சோம்பேறித்தனம் அல்லவே

வேறு ஆசிரியர்கள் தயங்காது குப்பைக்குள் எறிவதை நான் கஸ்டத்தை பாராது திருத்தி எழுதி எனது செலவில் அனுப்பியது என் குற்றமே -

ரோசம்,  நன்றி,  நரம்பில்லாத உனக்கு உதவிய என்னை மலத்தில் தோய்த்த பழம் செருப்பால் தான் விழாச வேணும்

இந்த பதிலை எழுத கிடைத்த சந்தர்பத்திற்கு அந்த கடித்தை எழுத தூண்டியோருக்கு என் மனமார்ந்த நன்றியை தவறாது கூறிவிடுங்கள்''

ஓட்டு மொத்தமாக ஈ ஆடவில்லை எந்த முகத்திலும்

திருலிங்கம் அய்யா கீழ்ப்பார்வை ஓன்றால் ஆசிரியரை நமட்டு சிரிம்பொன்றுடன் பார்த்தார்

அவ்வளவும் தான் -   

Posted via email from யாழ் நகரில் முன்னைய அரசாங்க நிர்வாகம்

No comments: