Tuesday, May 18, 2010

'' எக்சாம் பாஸ் பண்ணினாபோல பெரிய ஆள் எண்டு நினையாதையும் -- மனிசனை மதித்து வேலை வாங்க தெரியோணும் ''

பரமசிவம் திடுதிடுப்பென்று அலட்சியமாக -- ஆனால் ஆணித்தரமாக -- வாய் வன்மையால் -- சிற் ஊழியர்களை புறக்கணிக்கும் உயர்தர ஓபிசேர்களை   மட்டம் தட்டுவான்.

இவன் எனது அன்பான நண்பன் -- கொழுவுபட்டுள்ளோம் -- பல தடைவைகள் -- அடுத்த நிமிடம் சண்டையிட்ட சகோதரங்கள் போல ஓட்டிக் கொள்வோம்.

இவன் அரியாலை எழுத்தோவியர் சூடாமணியின் ''பேச்சு வார்த்தை'' இல்லாத ஓரே தம்பி.

அவனது செயல் திறன்களை கண்டனுபவித்தோரே நம்புவர்.

ஓர் நாள், ஓர் திமிர் பிடித்த Accountant,  தான் முன்னை நாள் கிளார்க் என்பதை மறந்தவர் --

என்னுடன் கதைத்து கொண்டிருந்த --

''  டேய் பரமசிவம், உங்கை என்ன சிரிப்பு, இங்கை வா -- இந்த மேசையை அந்த பக்கத்திலை அரக்கி வை '' 

''  பாருங்கோ சேர் விளையாட்டை'' என்று எனக்கு இரகசியமாக சொன்னவன் -- --

எக்கஔண்ரனை பார்த்து ''  அய்யா, நான் ஓரு சாதாரண ஓபிஸ் பியோன் -- என்ரை வேலை -- ஓரு மேசையில இருக்கிற பைலை மற்ற மேசையில வைக்குறது மட்டும் தான் -- உந்த மேசை கதிரை அரக்குற வேலைக்கெல்லாம் லேபறர் ஓண்டை தேடிப் பிடியும் ''

திகைத்து நின்றவரது முத்தில் அசடு வழிந்த மாதிரி --

விறு விறு என்று வரிந்து கட்டிக்கொண்டு
Office Assistant நிர்வாகியிடம் முறையிட்ட Accountant   --

''  எக்சாம் பாஸ் பண்ணினாபோல பெரிய ஆள் எண்டு நினையாதையும் -- மனிசனை மதித்து வேலை வாங்க தெரியோணும் '' 
என்று தலை குனிய வாங்கி கட்டினார்.

OA சேர் வந்தார், '' தம்பி பரமசிவம் இந்த மேசையை கொஞ்சம் அங்காலை பிடியடாப்பா ''

'' ஓம் சேர் ''

அலுவல் முடிந்தது -- கந்தோரும் சிரி சிரியென்று சிரித்தது --

அன்றுடன் கணக்கரது திமிர் அடங்கியது !   

Posted via email from What's New in Internet Today !

No comments: